[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளராக டிசம்பர் 31-ல் சசிகலா பொறுப்பேற்பு?

sasikala-to-be-sworn-as-admk-general-secretary-on-decmber-31

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா டிசம்பர் 31-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அந்த கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவிடம் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலுடன் போயஸ் தோட்டம் சென்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சசிகலாவை தலைமைப் பொறுப்பேற்குமாறு நேரில் வலியுறுத்தினர். பன்னீர்செல்வம் அளித்த தீர்மான நகலை பெற்றுக் கொண்ட சசிகலா, அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா டிசம்பர் 31-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close