[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

எத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள்..? மு.க.ஸ்டாலின் கேள்வி

mk-stalin-questions-about-demonetisation

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இதுவரை எத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது பற்றி மத்திய அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறுகிய கால சிரமம், நீண்ட கால பயன் என்று மத்திய அரசு சொல்லி வந்தாலும், மக்களுக்கு இன்றுவரை எஞ்சியிருப்பது நீங்கா துயரம் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகள் முடக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் வாழ்வாதாரம் நிலைகுலைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ‌‌ பண மதிப்பிழப்பு திட்டத்தால் இதுவரை எத்தனை கறுப்புப் பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது பற்றி வெ‌ள்ளையறிக்கை வெளியிட‌ வேண்‌‌டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பணம் எடுப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close