[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு

planning-for-new-year-celebrations

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடிபோதையில் வாகனங்களை ‌ஓட்டுவோர் மீது சட்டப்படி ‌கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் கொண்டாட்டங்களை கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் மெரினா பீச், அண்ணா சாலை பகுதிகளில் 31ம் தேதி இரவு குடிபோதையில் இருசக்கர வாகனங்களில் அதி வேகத்தில் செல்வது வழக்கமாகியுள்ளது. இதைத் தடுக்க காவல்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close