[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

மோடி நடவடிக்கையால் மிஞ்சியது நீங்கா துயரமே: மு.க.ஸ்டாலின்

stalin-accusation-on-demonetisation

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களுக்கு இன்று வரை எஞ்சியிருப்பது ‘நீங்கா துயரம் மட்டுமே!’ என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பை ‘குறுகிய கால சிரமம், நீண்ட கால பயன்’ என்று மத்திய அரசு சொல்லி நடைமுறைபடுத்தி உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்படும் மக்களின் துயரம் கண்டு அண்டை மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், அதிமுக அரசு வேடிக்கை மட்டுமே பார்த்து வருவதை தமிழக மக்கள் நிச்சயம் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை சுட்டிகாட்டியுள்ள ஸ்டாலின், 125 கோடி மக்களின் பிரச்சனையை பாராளுமன்றத்தில் விவாதிக்க பாஜக அரசுக்கு நேரமில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று மோடி அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை என்று தெரிவித்துள்ளார். எத்தனை கருப்பு பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close