[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலா ஒப்புதல்

sasikala-natarajan-accepts-the-resolution-as-tn-cm-o-panneerselvam-hands-over-a-copy-of-it-to-her

அதிமுகவின் தலைமையேற்க சசிகலா ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அந்த கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், சசிகலாவிடம் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய முதலமைச்சரும், அதிமுகவின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலுடன் போயஸ் தோட்டம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சசிகலாவை தலைமைப் பொறுப்பேற்குமாறு நேரில் வலியுறுத்தினர். பன்னீர்செல்வம் அளித்த தீர்மான நகலை பெற்றுக் கொண்ட சசிகலா, அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா இன்று முதலே பணியாற்றுவார் என்றும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close