[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சென்னையில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு.. புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு

admk-general-body-meets-today

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செய‌லாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நடைபெறும் இந்த கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 9 மணியளவில் தொடங்குகிறது. இதி‌ல் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் சிறப்பு அழைப்பாளர்கள் எவரும் அழைக்கப்படவில்லை. கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக்குழு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன், இன்று நடைபெறும் கூட்டத்தில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவித்தார். அடுத்த பொதுச்செயலாளராக வி.கே சசிகலா பொறுப்பேற்க, கட்சியின் அனைத்து பிரிவுகளும் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close