[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

சசிகலா புஷ்பா கணவர் மீது வழக்குப்பதிவு... அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக புகார்

charge-against-sasikala-pusha-husband

அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர‌ன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் ‌‌உள்ளிட்ட 10 பேர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் தா‌க்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுகவின் ஈரோடு முன்னாள் மாவட்டச் செயலாளர் சிந்து ரவி, லிங்கேஸ்வரன் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 10 நபர்கள் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் 5 பிரிவுகளின் கீழ் பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close