[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் தேர்வுப் பணி மட்டுமே நடக்கும்: பொன்னையன்

we-have-not-received-any-application-for-the-general-secretary-post-till-now-c-ponnaiyan

நாளை கூட உள்ள அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் பணி மட்டுமே நடைபெறும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் அதன்படி, அ.தி.மு.க,வின் பொதுக் குழு கூட்டம், நாளை நடைபெறவுள்ளதாகக் கூறியுள்ளார். பெரும் சர்ச்சைக்குப் பிறகு, இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என கூறுவது தவறான கருத்து என்று கூறிய பொன்னையன், விதிகளின் படியே பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக விளக்கினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதுவரை யாரும் அந்த பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் மனு தாக்கலும் செய்யவில்லை என்றும் பொன்னையன் தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என, கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை என்றும் அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன்,கடந்த 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர் என்றும் பொன்னையன் கூறினார்.

அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அன்பின் மிகுதியால் கட்சியினர் அவ்வாறு அழைத்ததாகவும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்களை தாக்கியது கட்சிகாரர்கள் இல்லை என்றும் அது ஒரு உணர்ச்சிபூர்வமான செயல் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close