[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் கைகலப்பு... ஒருவர் காயம்

aiadmk-headquarters-injured-in-the-melee

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் என கூறப்படும் நபர் ஒருவர், அதிமுக தலைமையகத்திற்கு வந்துள்ளார். இதையறிந்த அதிமுக தொண்டர்கள், அந்த நபரை தாக்கினர். ‌தாக்குதலில் அந்த நபருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவரை, காவல்துறையினர் அங்கிருந்து மீட்டுச்சென்றனர். இப்பிரச்னை தொடர்பாக அங்கு பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டில், அதிமுகவின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தன்னை மாநிலங்களவை உறுப்பினர் பதவியியிலிருந்து விலக வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாநிலங்களவையில் பேசியிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close