JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
தமிழ்நாடு 27 Dec, 2016 01:21 PM

வைகோ விலகல்... அதிர்ச்சி... அதே சமயம் ஆறுதல்...

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட்டணிக்கட்சிகளுடனான நட்பு தொடரும் என வைகோ தெரிவித்திருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் மக்கள் நலக் கூட்டியக்கம் என்பது நிரந்தரமான அமைப்பல்ல என்றும் வைகோவின் இந்த முடிவை ஏற்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். வைகோவின் இந்த முடிவு நாகரிகமானது என்று கூறிய அவர், ஆனால் அவர் எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணி உடைய தான் காரணமாக இருக்க மாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகோ தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு முன்பு நான்கு கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை வைகோ அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கும் என்றும் முத்தரசன் கருத்துத் தெரிவித்தார். கூட்டணிக்கட்சிகளுடனான நட்பு தொடரும் என வைகோ தெரிவித்திருப்பது மகிழ்ச்சி எனவும் முத்தரசன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் இது குறித்துக் கருத்தும் தெரிவிக்கையில், மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்து வைகோ விலகியது நல்ல முடிவே என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக தெரிவித்தார். கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் எனவும் வைகோ கூறினார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கின. அதன் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்பட்டு வந்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads