[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக

vaiko-quited-from-people-welfare-alliance

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக அதன் பொதுச் செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் மதிமுக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக தெரிவித்தார். கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் எனவும் வைகோ கூறினார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கின. அதன் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்பட்டு வந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close