[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

நாரணாபுரம் பட்டாசு ஆலை தீ விபத்து... உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

naranapuram-crackers-accident-5-dead

விருதுநகர் மாவட்டம் நாரணாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், நாரணாபுரத்தில் ரமேஷ் கண்ணா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், திடீரென தீ பற்றியபோது ‌அந்த அறையில் இருந்த 8 பேரும் தீயில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் நேற்று உயிழந்த நிலையில், இன்று அதிகாலை முனியராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீதமுள்ள 3 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாகியிருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ் கண்ணா மற்றும் மேற்பார்வையாளர் ஆரோக்கியராஜ் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close