[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு இன்று சென்னை வருகை

central-committee-today-visit-in-chennai

வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்தியக்குழு இன்று சென்னை வருகிறது.

இக்குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவீன் வசிஷ்டா, வேளாண் துறை இயக்குநர் மனோகரன், நிதித் துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் கவுல், குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார துறையின் துணைச் செயலாளர் நாராயண் ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் சென்னை மண்டல இயக்குநர் ரோஷினி அர்தூர், மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் சுமீத் குமார், மத்திய சாலை போக்குவரத்துத் துறையின் சென்னை மண்டல அதிகாரி அர்விந்த், ஊரக வளர்ச்சித் துறை துணைச் செயலாளர் திவாரி மற்றும் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் கோவை இயக்குநர் அழகேசன் ஆகிய 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

நாளை காலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் இக்குழுவினர், அதனையடுத்து, புயல் பாதிப்பை விளக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிழற்படங்களைப் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கின்றனர்.

பின்னர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய உள்ளனர். இத்தகவலை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close