[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

தலைமைச்செயலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம்... அதிமுக கண்டனம்

admk-condemns-it-raid-in-sectratriate

தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் தலைமைச்செயலர் ராம மோகன ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சோதனையின்போது, துணை ராணுவத்தை மட்டும் அழைத்துச் செல்லப்பட்டதை குறிப்பிட்டுள்ள அவர் , இந்தச்செயல் மொத்த மாநிலமும் நம்பகத்தன்மையற்றது என்ற தோற்றத்தை வருமான வரித்துறை கருதுவது போன்ற தோற்றத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி, தமிழகத்தின் எந்தவொரு பணியாளரையும் கண்காணிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ சிபிஐக்கு அதிகாரம் இல்லை என்றும் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனையிடும் முன் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது நாட்டின் நிர்வாக மரபு என்று குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு அனுமதி கேட்காமல் அதிகாரிகள் சோதனையிடச் சென்றிருந்தால் அது மிக மோசமான முன்னுதாரணம் என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close