[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வேறு ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பது நாகரீகமல்ல: திருநாவுக்கரசர்

thirunavukkarasar-accused-on-tn-ministers

முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருக்கும்போது, வேறு ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்று தமிழக அமைச்சர்களே கூறுவது நாகரிகம் அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவிற்கு சசிகலாதான் பொதுச் செயலாளராக வேண்டும். அவரே முதலமைச்சர் பொறுப்புக்கும் வர வேண்டும் எனவும் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த திருநாவுக்கரசர், முதலமைச்சராகப் பன்னீர் செல்வம் இருக்கும் போது, வேறு ஒருவரை முதலமைச்சராக வேண்டும் என தமிழக அமைச்சர்கள் கூறுவது நாகரீகமல்ல எனக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக காங்கிரஸ் நிர்வாகம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திக்க இருப்பதாகக் கூறினார். கட்சியில் விரைவில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close