[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

விவேக் பங்குதாரருக்கு ரூ.100 கோடி ஒப்பந்தம்?...சிபிஐ விசாரணைக்கு வாய்ப்பு

rs-100-crore-deal-to-vivek-partner-bhaskar-naidu

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மகன் விவேக் நடத்தும் நிறுவனத்தின் பங்குதாரர் பாஸ்கர் நாயுடுவின் நிறுவனத்திற்கு, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மருத்துவக் கல்வித் துறையின் ஒப்பந்தம் வழங்கப்பட்‌டிருப்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவின் மகன் விவேக் நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2014 ஆம் ஆண்டு பாஸ்கர் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பாஸ்கர் நாயுடு நடத்தி வரும் பத்மாவதி என்ற மருத்துவம் மற்றும் மருத்துவ மேலாண்மை சேவைகள் சார்ந்த நிறுவனத்துடன், தமிழக அரசின் மருத்துவ கல்வித் துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அன்று ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி 63 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஒப்பந்த பணியாளர்களை வழங்க, பாஸ்கர் நாயுடுவின் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக ஆண்டு ஒன்றிற்கு 129 கோடியே 86 லட்சத்து 52 ஆயிரத்து 203 ரூபாய் வரை டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வழங்குவதில் ஏதாவது முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close