[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சென்னையில் ரேஸ் நடத்திய இருசக்கர வாகனத்தில் தீப்பற்றியது

fire-in-bike

சென்னை கத்திப்பாரா சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் ரேஸ் நடத்தியபோது வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

கத்திப்பாரா சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்தை டீக்கடை அருகே நிறுத்திவிட்டு அங்கு நின்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் அவரது வாகனத்தை திருடிச் சென்றனர்.

திருடிய இருசக்கர வாகனத்தைக் கொண்டு கத்திப்பாரா சாலையில் ரேஸ் நடத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் தீப்பிடிக்கவே மர்ம நபர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்துக் காவல் துறையினர், சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றி போக்குவரத்தை சீர்ப்படுத்தினர். மேலும், டேங்கர் லாரி மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரால் தீயணைக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close