[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

2011-2016 வரை சட்டவிரோத பான் மசாலா தயாரிப்பில் காவல் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு

police-involved-in-the-preparation-of-pan-masala

தமிழக ஆந்திர எல்லையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா தயாரிப்பில் போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, உள்துறை செயலாளருக்கு சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் கடிதம் எழுதியுள்ளார். அதில், புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சட்டவிரோதமாக பான்மசாலா, மாவா மற்றும் குட்கா ஆகியவை ஏற்றுமதி, விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்பட்டதில் செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதி காவல் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

செங்குன்றத்தில் சட்டவிரோத பான்மசாலா தயாரித்து வந்த குடோன்களில் கடந்த ஜூலை மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும், அதுவரை சட்டவிரோதமாக பான்மசாலா தயாரிப்பை சில அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததாகவும் பெயர்களுடன் கடிதத்தில் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close