[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மெட்ரோ ரயில் 2ம் நிலைத் திட்டத்திற்கு விரைந்து ஒப்புதலளியுங்கள்: ஓ.பன்னீர்செல்வம் ஜப்பானிடம் வலியுறுத்தல்

metro-rail-project-will-last-2-rush-opputalaliyunkal-japan-urges-o-pannirselvam

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் நிலை திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைவர் ஷின்சி ஹிடாகா தலைமையிலான குழுவினர் தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினர். அப்போது, சென்னை மெட்ரோ ரயில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார பாதுகாப்புத் திட்டம், தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஆதரவு கொடுத்து வருவதற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும் சென்னை நகர்ப்புற‌ உட்கட்டமைப்புத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தமிழ்நாட்டு முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் நிலை மற்றும் மெட்ரோ ரயில் இரண்டாம் நிலை திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close