[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பெண் காவலர் மீது ஆசிட் வீசிய மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்..!

unidentified-persons-threw-acid-on-5-separate-police-forces-to-catch-the-girl

திருப்பத்தூரில் பெண் காவலர் மீது ஆசிட் வீசிய மர்மநபர்களை திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர் செல்வம் மற்றும் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் லாவண்யா மீது இரண்டு நபர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் அவரது முகம், வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெண் காவலரின் கணவர் உட்பட இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close