[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

leaders-christmas-wishes

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ மக்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துவதாக திமுக தலைவர் கருணாநிதி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையின மக்களின் உரிமைகளை காக்க கிறிஸ்துமஸ் நாளில் உறுதியேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தன் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பையும்,பொறுமையையும் போதித்த இயேசு கிறிஸ்துவின் வழியில் நடக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரத்துவமும் மனித நேயமும் மக்கள் மனதில் மேலோங்க கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உறுதிகொள்வோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சிறுபான்மையின மக்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் நிறைந்து வாழ்வு சிறக்க வேண்டுவதாக ஜி.கே.வாசன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தை காக்க தன்னையே அர்ப்பணித்த தியாகத்தின் திருவுருவமான இயேசுபிரானின் போதனைகளை மனதிற்கொள்வோம் என்று இந்திய ஜனநாயகக்கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close