[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

வேலூரில் பெண் காவலர் மீது ஆசிட் வீச்சு...!

the-acid-throw-on-woman-constable

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் காவலர் மீது இருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடிந்ததும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக லாவண்யா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், லாவண்யாவை வழிமறித்து அவரது முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் அவரது முகம், வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாவண்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர் செல்வம் மற்றும் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆசிட் வீசியவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close