[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

தமிழகத்தில் வருமானவரித்துறை சோதனையில் சிக்கியவை என்னென்ன.!

chennai-income-tax-raid-details

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வரை நீண்டது. இதுவரை நடந்த சோதனை குறித்த விவரங்கள்.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 144 கோடி ரூபாயும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன. சே‌கர் ரெட்டியுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று பார்த்தால், மூன்று பேர் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கல்யாணசுந்தரம், விவேக், கோடி ராஜகோபாலன் ஆகியோர். கல்யாணசுந்தரம் என்பவர், மாநிலச் சுற்றுச்சூழல் துறையில் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி. இவரின் சென்னை வீடு, அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையின் போது, சேகர் ரெட்டியிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் வாங்கியதை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து ராமமோகன ராவின் மகன் விவேக்கின் திருவான்மியூர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது அலுவலகத்தில் இருந்து 2 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது, 16 கோடி ரூபாய்க்கான வருமானத்தை மறைத்ததை வருமான வரித் துறையினரிடம் விவேக் ஒப்புக் கொண்டிருக்கிறார். விவேக்கை மையமாக கொண்டவர்களாக பார்த்தால், மிக முக்கியமான இடத்தில் இருப்பது அவரது தந்தையும், முன்னாள் தலைமைச் செயலாளருமான ராம மோகன ராவ். இவரின் வீடு மற்றும் தலைமைச் செயலக அலுவலங்களில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில், வீட்டில் இருந்து ஆவணங்களும், தலைமைச் செயலகத்தில் இருந்து 2 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

ராமமோகன ராவின் சம்பந்தியான பத்ரி நாராயணன் என்பவரின் சித்தூரில் உள்ள வீட்டில் இருந்து 24 லட்சம் ரூபாயும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. விவேக்கின் நண்பரான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அமலநாதன் என்பவரின் சைதாப்பேட்டை வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 1.7 கோடி ரூபாய்க்கான வருமானத்தை மறைத்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். சுந்தர் என்ற நண்பரின் சென்னை வீட்டில் ஆய்வு நடத்தியதில் ஆவணங்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடைசியாக கோடி ராஜகோபாலனின் சென்னையில் உள்ள வீடும் வருமான வரித்துறை சோதனைக்கு‌ தப்பவில்லை. இந்த சோதனையிலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. மேலும் 14 கோடி ரூபாய்க்கு வருமானத்தை மறைத்ததை ஒப்புக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close