[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

அதிமுக பொதுக்குழு, செயற்குழு 29-ம் தேதி கூடுகிறது

aiadmk-general-council-the-executive-committee-meeting-on-29

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 29 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டங்கள் வரும் 29 ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்து 770 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 280 செயற்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சிப்பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவையைடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close