[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

stalin-request-to-tamilnadu-government

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேசிய விவசாயிகள் தினத்தை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பல்வேறு பகுதிகளில், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். வாழ்வாதாரம் சீர்குலைந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக உதவும் வகையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது அவசரத் தேவை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமும், தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் தமிழக அரசு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close