[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் பெற்று இளம்பெண்ணை மிரட்டிய மர்ம கும்பல் கைது

women-threatended-using-duplicate-simcard-4-arrest

கரூரில் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் பெற்று, இளம்பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 பேர் காவல் துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் பெற்ற விக்ரம், மோகன்பாபு, சுப்ரமணி, சுகன் என்ற 4 பேர் கல்லூரி மாணவி ஒருவரின் தந்தைக்கு போன் செய்து மாணவியின் ஆபாச படங்கள் தங்களிடம் இருப்பதாகவும், பணம் தராவிட்டால் அவற்றை இன்டர்நெட்டில்
பதிவேற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாணவியின் தந்தை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் அந்த 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையடுத்து அவர்களிடமிருந்து 100 சிம்கார்டுகள் மற்றும் 50-க்கும் அதிகமான போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்
துறையினர் 4 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close