[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

admk-district-secretary-meeting-today

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் அதிமுக பொதுச் செயலாளராக யார் பொறுப்பேற்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானோர் மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. ஜெயலலிதா மறைவையடுத்து நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 29-ஆம் நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் அதிகாகரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close