[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தலைமைச்செயலாளராகும் 4 ஆவது பெண் கிரிஜா வைத்தி‌யநாதன்..!

girija-vaidyanathan-is-4th-woman-chief-secretary-of-tamilnadu

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கிரிஜா வைத்தியநாதன், தலைமைச்செயலாளராகும் 4 ஆவது பெண் கிரிஜா வைத்தி‌யநாதன் ஆவார்.

1940 முதல் 201‌6 வரையில் 44 பேர் தமிழக தலைமைச்செயலாளராக பொறுப்பு வகித்துள்ளனர். இவர்களில் 4 பேர் பெண் தலைமைச்செயலாளர்கள். தற்போது நான்காவது பெண் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கிரிஜா வைத்தியநாதன்.

முன்னதாக, 2002 முதல் 2005 வரை லஷ்மி பிரனேஷ் தலைமைச்செயலாளராக இருந்துள்ளார். 2010 முதல் 2012 வரை மாலதியும், 2013 முதல் 2014 வரை ஷீலா பாலகிருஷ்ணனும் தலைமைச்செயலாளர்களாக இருந்துள்ளனர். தற்போது நான்காவது பெண் தலைமைச்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1959 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவரான கிரிஜா வைத்தியநாதன் 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவ‌ர். இவரது தந்தை வெங்கட்ராமன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர். முதுகலை இயற்பியல் பட்டதாரியான கிரிஜா, சென்னை ஐஐடியில் சுகாதார பொருளியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நில நிர்வாக ஆணையராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் தற்போது தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், தொழில் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநர் போன்ற பொறுப்புகளை கிரிஜா வைத்தியநாதன் வகித்துள்ளார். நிதி மேலாண்மையில் அனுபவம் மிக்கவரான கிரிஜா, தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச்செயலாளராக பதவி வகித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்த அனுபவம் உடையவர் கிரிஜா வைத்தியநாதன். தமிழகத்தில் தாய், சேய் நலத்திட்டத்தை சிறப்புற செயல்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் மாநில சுகாதார திட்ட இயக்குநராக இருந்தபோது, தமிழகம் சிறந்த செயல்பாட்டிற்கான விருதைபெற்றது. சுகாதாரம், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் கிரிஜா வைத்தியநாதன்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close