[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

திண்டுக்கல், மதுரையில் 'புதிய தலைமுறையின் மாணவர் மன்றம்' தொடக்கம்.. மக்களுக்கு சேவையாற்ற வேண்டுகோள்

puthiya-thalaimurai-manavar-manram-inauguration-held-in-dindigul

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் குமரப்பசெட்டியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மதுரை கோசங்குளத்தில் உள்ள சி.இ.ஒ.ஏ மெட்ரிகுலேஷன் பள்ளியி்ல், புதிய தலைமுறை மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது.

புதிய தலைமுறை குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷ்யாம் குமார் புதிய தலைமுறை மாணவர் மன்றங்களை தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்வில் குமரப்பசெட்டியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குநர் அருணாச்சலம், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், புதிய தலைமுறையின் மாணவர் மன்‌றம் மூலம், மக்களுக்கு சேவையாற்ற தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.இ.ஒ.ஏ மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிறுவனத் தலைவர் ராஜா கிளைமெக்ஸ் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், புதிய தலைமுறையின் மாணவர் மன்றக்குழுவில் தங்களை மாணவர்கள் ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close