[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

மாணவர்களின் போதை வஸ்தாக மாறிய பசைகள்...

adhesives-vast-became-intoxicated-deteriorating-school-college-students

தமிழகத்தில் மதுப்பழக்கத்தை ஒழிக்க பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் வளரும் தலைமுறையான பள்ளி மாணவர்களிடம் புதிய வகையான போதை பழக்கத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவ்வகையில் நாகை மாவட்டம் சீர்காழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய முறையில் போதைக்கு அடிமையாவதாக புகார் எழுந்திருக்கிறது. விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த 8 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் போதைபொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த தாயின்கையில் பிளேடால் கிழித்துள்ளான். இதனால் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஒருசிலர் போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை பின்தொடர்ந்ததில் அவர்கள் விலை குறைந்த மரப்பொருட்கள் மற்றும் டயர், டியூப்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்யூஷனான பெபிகால், பெபிபான்டு ஆகியவற்றை முகர்ந்து புதிய வகையில் போதை ஏற்றிக் கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இதனைப்பார்த்து மற்ற ஊர்களில் உள்ள மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு ஆளாவதும் தெரியவந்தது. இவ்வாறு புதிய வகை போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஹர்டுவேர்களில் மட்டுமே விற்கப்படும் இத்தகைய சொல்யூஷன்கல் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய மளிகை கடைகளிலும் விற்கப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஹார்டுவேர் கடைகளில் மட்டும் இத்தகைய பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பதுடன், தொழில் முறை பயன்பாட்டுக்கு அன்றி, மாணவர்களுக்கு இந்த சொல்யூஷன்கள் விற்கப்படுவதை தடுக்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close