[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ரூ. 16 கோடிக்கு வரி ஏய்ப்பு... ராமமோகன ராவ் ஒப்புதல்

ramamohana-rao-it-raid-update

பதினாறு கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ராமமோகன ராவ் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ், வருமான வரித்துறை சோதனைகளை அடுத்து இன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை தொடங்கி 13 இடங்களில் சோதனை நடந்த நிலையில் இன்று அதிகாலையுடன் 5 இடங்களில் சோதனை முடிந்தது. 7 இடங்களில் மாலையுடன் சோதனை முடிவடைந்தது. ராமமோகன ராவின் மகன் விவேக்கின் அலுவலகத்தில் மட்டும் இரவு வரை வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

இதுவரை ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் வீட்டில் இருந்து 18 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் ‌6 லட்சம் ரூபாய்க்கு பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பரிசுப்பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.இவற்றின் மொத்த மதிப்பீடு ஆய்விற்கு பின்னரே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல முக்கிய ஆவணங்கள், லேப் டாப், கம்ப்யூட்டர் டிஸ்க்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விவேக் மற்றும் ராம மோகன் ராவ் ஆகியோர் சேகர் ரெட்டியுடன் பல மணிநேரம், தொலைபேசியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ராம மோகன் ராவ் ஒப்புக்கொண்டு‌ள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close