[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கருணாநிதி நாளை வீடு திரும்புவார்.... கனிமொழி

kanimozhi-talk-to-karunanidhi-tomorrow-will-come-home

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி நாளை வீடு திரும்புவார் என அவரது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழ‌ி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் டிச.16 ஆம் தேதி இரவு மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கருணாநிதிக்கு தொற்றினை போக்க மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் திமுக தலைமை கழகம் சார்பில் கருணாநிதியை நேரில் பார்க்க கட்சியினர் மற்றும் நண்பர்கள் யாரும் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் நாகரிகம் கருதி டெல்லி முதல் தமிழகம் வரையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவரது நலம் விரும்பிகளும் காவேரி மருத்துவமனை வந்து சென்றனர்.

இந்நிலையில் கலைஞரின் உடல் நலம் சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக நேற்று கருணாநிதி இருக்கையில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் கருணாநிதி நாளை (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என அவரது மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close