[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

சட்டம் கடமையை செய்ய வேண்டும்: வைகோ

vaiko-say-law-should-do-their-duty

ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பது தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

ஊழலில் ஈடுபட்டவர் எவராக இருந்தாலும், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை‌ ஆக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close