[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

தமிழக புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

girija-vaidyanathan-appointed-chief-secretary-of-tamil-nadu

தமிழக புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடுகளில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கட்டுக்கட்டாக பணமும், தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இதனால் அவரை பதவியிலிருந்து நீக்கக்கோரி பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

கிரிஜா வைத்தியநாதன் நில நிர்வாகத்துறை ஆணையர் பொறுப்பில் பதவி வகித்தவர். இவரே தற்போது தமிழக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். கிரிஜா வைத்தியநாதன் 1981 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதியான இடத்தில் 16 அதிகாரிகள் இருந்த நிலையில் கிரிஜா வைத்தியநாதனை தமிழக அரசு தேர்வுசெய்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close