[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

சென்னை விமான நிலையத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் ரூ.1.34 கோடி பறிமுதல்

new-1-34-crore-money-seized-in-chennai-airport

சென்னை விமானநிலையத்தில் 5 பேரிடமிருந்து ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகளை வருவாய் நுண்ணறிவு‌ப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்த‌தன் பேரில் சென்னை விமானநிலைய வளாகத்தில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5 பேரின் பையில் புதிய ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ‌இதையடுத்து அவர்களிடம் இருந்த ஒரு கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

தற்போது அந்த 5 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டுகளில் இருக்கும் வரி‌சை எண்ணை வைத்து அவை எந்த வங்கிக் கிளைகளிலிருந்து பெறப்பட்டவை என்று விசாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் ஐந்து பேரும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனரா..? அல்லது வெளிநாட்டு கரன்சியாக மாற்ற முயற்சித்தனரா..? என்ற கோணத்தில் விசாரணை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விசாரணையின் முடிவில் அவர்கள் ஐவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் சிக்குவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close