[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

rameshwaram-fishermen-strike

ஒரே நாளில் 29 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்து ‌ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை கச்சத்தீவுக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ‌12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி சிறைபிடித்தனர். இதேபோல ‌‌நேற்று மாலை 3 மணியளவில் ராமேஸ்வரம் மற்றும் கோட்டை பட்டிணத்தை சேர்ந்த 17 மீனவர்களையும் அவர்களது மூன்று படகுகளையும் நெடுந்தீவு கடல்பகுதியில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் கடற்படை முகாமிற்கு அவர்களை கொண்டு சென்றனர்‌.‌

இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்னர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close