[X] Close
JUST IN

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

tn-cm-letter-to-pm-for-release-of-tamilnadu-fishermen

இலங்கைச் சிறைகளில் உள்ள 51 தமிழக மீனவர்களையும், 114 மீன்பிடி படகுகளையும் இனியும் காலம் தாழ்த்தாமல் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார். நேற்றும் 29 தமிழக மீனவ‌ர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பன்னீர்செல்வம், கச்சத்தீ‌வு இலங்கைக்கு வழங்கப்பட்டது அரசியலமைப்பிற்கு எதிரானது என ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே, இலங்கையுடனான தற்போதைய கடல் எல்லையை இறுதியானது என ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் தமிழகத்தின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையில் பிரதமரின் நேரடி தலையீடு தேவைப்படுவதாக கூறியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிக‌ரித்திருப்பது தமிழக அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close