[X] Close
JUST IN

தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

stalin-said-secretary-should-resign-to-him-job

வருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்நிலையில், புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின், வருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளரை விரைவில் நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெறுவது தமிழகத்திற்கு பெரிய தலைக்குனிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close