[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ராம மோகன ராவின் பதவி பறிபோகுமா?

ram-mohana-rao-house-raid

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒருவர் வீட்டில் இப்படி ஒரு சோதனை நடப்பது இதுதான் முதல் முறை. அவரது பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம மோகன ராவ் 1985ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இங்கிலாந்தில் உயர் கல்வி பயின்ற இவர் பொருளாதாரம் மற்றும் கணக்கியலில் முதுகலை பட்டங்களை பெற்றவர். தமிழக அரசில் சமூக நலத்துறை, தொழில் துறை என பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித் தாள் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.

பிறகு 2011ம் ஆண்டு முதல் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் இருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 8ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார்.

இவரது பதவிக் காலம் வரும் ஆண்டு செப்டம்பருடன் முடிகிறது. இந்த நிலையில் அவரது வீட்டில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் சிக்கினாலோ, ராமமோகன ராவ் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரியவந்தாலோ அனேகமாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.அவர் மீது குற்றம் இருப்பதாகத் தெரியவந்தால், பதவிக்காலம் முடிவடைய ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில் அவரது பதவி இப்போதே பறிக்கப்படலாம் எனக் கூறுப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close