[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை தமிழகத்திற்கே தலைகுனிவு: மு.க.ஸ்டாலின்

mk-stalin-remarks-about-income-tax-raid-in-chief-secretary-house

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வது தமிழகத்திற்கு தலைகுனிவு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியின் நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவை குறித்து முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மணல் வியாபாரி, சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கக்கான ரூபாய் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாகத் தான் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் பலர் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளிவருதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொள்வது என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தமிழக நலன்களைப் புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படுபவர்கள் மீது வெளிப்படையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்தவர்களை தப்ப விடக் கூடாது எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close