[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

நாகையில் கடல் சீற்றம்.. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

fishermen-not-go-to-sea-in-nagapattinam

நாகை மாவட்ட கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

‌வங்கக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, நாகை மாவட்ட கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன்காரணமாக 3-ஆவது நாளாக இன்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், செருதூர், கல்லார், கோடியக்கரை உள்ளிட்ட பல மீனவ கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே 15,000 மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிது‌ம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close