[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை.. தொல்.திருமாவளவன்

people-welfare-alliance-is-not-a-permanent-system-thol-thirumavalavan

மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 28-ம் தேதி புதுச்சேரியில் அரசியலமைப்பு பாதுகாப்பு நடைபெறுகிறது. இதில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள் பங்கேற்கின்றன. ஆனால் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதால் அதில் பங்கேற்க இயலவில்லை என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் நலக் கூட்டணி நிரந்தர அமைப்பு இல்லை என கூறிய அவர், பிரச்சனைகளின் அடிப்படையில் போராடிய போது அது மக்கள் நலக் கூட்டியக்கம் எனவும், தேர்தலுக்காக இணைந்து செயல்பட்ட போது அது மக்கள் நலக் கூட்டணி எனவும் குறிப்பிட்டார். பொதுவாக இதுபோன்ற கூட்டியக்கமோ, கூட்டணியோ நிரந்தர அமைப்பாக இருந்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close