[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

income-tax-raid-in-tn-chief-secretary-rama-mohan-rao-house

சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், 131 கோடி ரூபாயும், 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை வளையத்திற்குள் சிக்கி உள்ள சேகர் ரெட்டியுடன் தலைமைச் செயலாளருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை அண்ணா ந‌கரில் உள்ள அவரது வீட்டில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் இந்த ஆய்வை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமைச் செயலாளரின் மகனது வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு தொடர்புடைய 13 இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர தலைமைச் செயலாளரின் மகனுக்கு நெருக்கமான 5 தொழில் அதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. பெங்களூரு ,சித்தூர் ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வரலாற்றில் அரசின் தலைமைச் செயலாளர் ஒருவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close