[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

வர்தா பாதிப்பு: சென்னை காச நோய் மருத்துவமனை சேத மதிப்பு ரூ.5 கோடி

vardha-damage-chennai-tuberculosis-clinics-damages-worth-rs-5-crore

வர்தா எனும் பெருங்காற்று புயலாக மாறியதால் சென்னையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சந்தித்த இழப்புகள் ஏராளம்.

பறவையினங்களே கூடு கட்டி வாழ தகுதியில்லாத வெறும் அழகுக்காக மட்டும் நகர் முழுவதும் வளர்க்கப்பட்ட மரங்களால் ஏற்பட்ட பாதிப்புகள், அவை ஏற்படுத்திய பெரும் சேதங்கள் தான் அதிகம்.

தாம்பரத்தில் உள்ள புகழ் பெற்ற காச நோய் மருத்துவமனையையும் வர்தா விட்டு வைக்கவில்லை. மருத்துவமனையில் உள்ள 13 வார்டுகளும் மேற்கூரை, ஜன்னல், கதவுகள் அனைத்தும் வர்தாவால் சூறையாடப்பட்டன. கதவுகளும் ஜன்னல்களும் திறந்த நிலையில் உள்ளதால் தொற்றுநோய் எளிதில் பரவுகிறது என்றும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களும் சேதமடைந்துள்ளன. வர்தாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையடையாததால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், காசநோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் புயல் பாதித்த அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மருத்துவமனை கண்காணிப்பளர் ஸ்ரீதர் தெரிவித்தார். ‌புயல் காரணமாக காசநோய் மருத்துவமனையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் அடைந்துள்ளதாகவும், சீரமைப்பு பணியில் 300 பணியாளர்கள், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்துள்ள வார்டுகளில் இருக்கும் நோயாளிகளுக்கு 50 சிறப்பு படுக்கைகள், உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட எல்லா நிவாரணப்பணிகளும் முழுமூச்சாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையில் எந்தவிதமான தொய்வையும் ஏற்படவில்லை என்று கூறும் அவர், ‌கட்டுமானப் பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயும், மின்இணைப்புகளை சரிசெய்ய 15 லட்சம் ரூபாயும் அரசு வழங்கி சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close