[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

கொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

oppoint-officials-to-recover-bonded

கொத்தடிமை‌களாக இருக்கும் தொழிலாளர்களை மீட்டு,
மறுவாழ்வு வழங்க மாநில அளவில் ஒரு அதிகாரியை 4 வாரத்துக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு ஒன்று, தலைமை நீதிபதி
எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. மனுவில் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கக் கோரும் வழக்குகளில், உரிய ஆவணங்களை அதிகாரிகள் தாக்கல் செய்வதில்லை என்றும், இதனால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கொத்தடிமை
தொழிலாளர்களை மீட்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தரவும் மாநில
அதிகாரி ஒருவரை 4 வாரத்திற்குள் நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், அவர்களை பணிக்கு அமர்த்துபவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை
குறித்த திட்டவரைவை 3 மாதத்திற்குள் வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close