[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ஜெயலலிதா உருவத்தில் 68 கிலோ எடை இட்லி படையல்..!

idly-weighing-68-kg-made-in-the-form-of-late-tn-cm-jayalalithaa-s-face-at-marina-beach

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 16-ஆவது நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில், ஜெயலலிதாவின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லி செய்யப்பட்டு அவரது நினை‌விடத்தில் படைக்கப்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமான ஜெயலலிதாவின் உடல் கடந்த 6-ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 16-ஆம் நாள் துக்கம் அனுசரிக்கும் விதமாக, அவரின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லியை சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின‌ர் மற்றும் ஆர்.கே.நகர் மக்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட இட்லியை அவரது நினைவிடத்தில் படையலிட்டு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close