[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

குடியரசுத் தலைவர், பிரதமர், ராகுல்காந்திக்கு சசிகலா நன்றி

sasiakala-letter-to-pm-president-and-rahul-gandhi

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்ததற்காக பிரதமர், குடியரசுத் தலைவர், ராகுல்காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமான அரசில் தலைவர்கள் சென்னை வந்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்ததற்காக நன்றி தெரிவித்து குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது தமக்கும் தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாக சசிகலா குறிப்பிட்டுள்ளார். ரா‌ணுவ சரக்கு விமானத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வந்தது நெகிழ வைத்ததாகவும் சசிகலா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், நேரில் வந்து பெருந்தன்மையாக தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவித்தது பெரும் ஆறுதலை தந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார். ஆறுதல்களை தெரிவித்ததற்கு தம் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோகமான தருணத்தில் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என சசிகலா தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close