[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

சென்னையில் ரூ.10 கோடி பணம், 6 கிலோ தங்கம் பறிமுதல்

10crore-6kilo-gld-seized

சென்னை நகை வியாபாரி வீட்டில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணம் மற்றும் 6 கிலோ தங்கம் வருமானவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் வருமானவரித் துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனைகளில் நாடு முழுவதும் ஏராளமான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பூக்கடைப் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் தங்கத்தின் மதிப்பிற்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை பெறுள்ளதாக வந்த தகவலையடுத்து வருமானவரித்துறையினர் அப்பகுதியிலுள்ள நகைக்கடைகளில் சோதனை நடத்தினர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஹிரானி
என்பவர் நடத்தி வரும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய போது கணக்கில் வரா‌த 10 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் 6 கிலோ தங்கம் பிடிபட்டது. இதையடுத்து பறிமுதல் செய்ப்பட்ட பணம், நகைகள் குறித்து ஹிரானியிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் ‘ஹிரானியின் வங்கிக் கணக்குககள் மற்றும் விற்பனை ஆவணங்கள் உள்ளிட்டவை
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close