[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் தகராறு..விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு

farmers-gun-shot

பட்டுக்கோட்டை அருகே வயலுக்கு நீர்பாய்ச்சும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழகாடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ். இவருக்கு சொந்தமான வயலுக்கு அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து நீர் பாய்ச்ச, அங்கு இறால் பண்ணை நடத்தி வரும் ரவிச்சந்திரன் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எழுந்த தகராறினை அடுத்து ராமமூர்த்தியின் உறவினர்கள், சத்தியராஜ் மற்றும் அவரது உறவினர்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டி விட்டும் தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த சத்தியராஜ் உட்பட அவரது உறவினர்கள் நான்கு பேரும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close