[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

வர்தா பாதிப்புக்கு ரூ.22,573 கோடி இழப்பீடு: பிரதமர் மோடியிடம் பன்னீர்செல்வம் கோரிக்கை

cm-ops-urges-pm-modi-to-allocate-rs-22-000-cr-package-for-vardah-cyclone-damages

வர்தா புயல் பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.22,573 கோடி தேவை என பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட வர்தா புயல் பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி அவர் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர், தமிழகத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28,000 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 70,000 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்துக்கு உடனடியாக ரூ.22,573 கோடியை ஒதுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்கவும், நாடாளுமன்றத்தில் அவருக்கு வெண்கலச் சிலை வைக்கவும் பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோரியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close